கடந்த 20ஆம் தேதி முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தில் இறந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்நாள் கூட்டத்தொடர் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து நேற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியின் மானிய கோரிக்கையைச் சமர்ப்பித்தார். அதுபோல் மதியம் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தனது துறை சார்ந்த மானிய கோரிக்கையைச் சமர்ப்பித்தார்.
அதைத் தொடர்ந்து இன்று 3வது நாளான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மானிய கோரிக்கை சமர்பிப்பதை யொட்டி கிரீன் சாலையில் உள்ள ரோஜா இல்லத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஐ.பெரியசாமியை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மாநகர பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூர்கழக நிர்வாகிகள் உள்பட இருநூறுக்கும் மேற்பட்டோர் அதிகாலையிலேயே அமைச்சர் வீட்டிற்கு மாலைகள் சால்வைகளுடன் வந்தனர். இப்படி அமைச்சரை வாழ்த்த வந்த கட்சிப் பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் இல்லத்தில் காலை உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்பின் சரியாக 8.15 மணிக்க அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் இருந்து வெளியே வந்த போது அங்கு கூடியிருந்த கட்சிப் பொறுப்பாளர்கள் எல்லாம் மாலை, சால்வைகளை கொடுத்து வாழ்த்து பெற்றனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி மானிய கோரிக்கைச் சம்மந்தமாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு நடப்பு ஆண்டில் தனது துறையில் நடைபெற்ற திட்டப்பணிகளையும், அடுத்த ஆண்டு வரக்கூடிய திட்டப்பணிகள் குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரில் தனது மானிய கோரிக்கை மூலம் சமர்ப்பிக்க இருக்கிறார்.