தமிழ்நாட்டில் கரோனா தொற்று சிகிச்சைக்காக தாராளமாக அனைவரும் நிதி வழங்கலாம் என்ற அடிப்படையில் சிறுவர்கள் தங்கள் உண்டியல் சேமிப்புகளை வழங்கி வருகின்றனர். மற்றொரு பக்கம் தொழிலதிபர்கள், சங்கங்கள், பொதுமக்களும் முதலமைச்சரிடம் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
இந்த நிதியில் இருந்து ஆக்ஸிஜன் டேங்கர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்களும் தங்கள் துறை சார்ந்து நிதி வழங்கி வருகின்றனர். அதே போல இன்று (07/06/2021) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கரோனா பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூபாய் 20 கோடிக்கான காசோலையை வழங்கினர். இதே போல பல அமைச்சர்களும் நிதி வழங்கியுள்ளனர்.