

Published on 11/12/2021 | Edited on 11/12/2021
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11/12/2021) தமிழ்நாடு தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசனின் மனைவி பவானி அம்மாள் மறைந்ததையொட்டி, விருத்தாச்சலத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினார். அத்துடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.பன்னீர்செல்வம், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன், ஆர்.ராஜேந்திரன், சபா.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.பாலசுப்ரமணியம் இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.