Skip to main content

சீட்டு கிடைக்காத தொண்டரின் கடையைத் திறந்து வைத்து வியாபாரம் செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 15/04/2022 | Edited on 15/04/2022

 

IP

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  வத்தலக்குண்டு 1வது வார்டில்  சீட் கேட்டு வாய்ப்பு கிடைக்கப் பெறாத திமுக தொண்டர் ராமச்சந்திரன் வருத்தத்தில் காணப்பட்டார். இருப்பினும் வத்தலக்குண்டு புறவழிச் சாலையில் தான் அமைத்துள்ள பேக்கரியை திறப்பதற்கு அமைச்சர் பெரியசாமிக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றார்.அவர் சட்டமன்றம் சென்றிருந்த வேளையில் கட்சி ஆபிஸில் அழைப்பிதழ் கொடுத்து விட்டு திரும்பி வந்துவிட்டார்.

 

இந்தநிலையில் ராமச்சந்திரன் கடை திறப்பு விழாவான இன்று யாரும் எதிர்பாராத வேளையில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் ஒன்றிய செயலாளர் முருகன், பேரூராட்சி தலைவர் சிதம்பரம் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சகிதமாக அதிகாலையிலேயே பேக்கரி திறப்பு விழாவுக்கு கடை வாசல் முன்பு வந்து இறங்கினார். அமைச்சர் ஐ.பெரியசாமி வருகையைச் சற்றும் எதிர்பாராத ராமச்சந்திரன் மகிழ்ச்சி கடலில் திக்குமுக்காடிப் போனார். கடையைத் திறந்து வைத்தவர் விறுவிறுவென விற்பனை பகுதிக்குச் சென்று தானே முன்னின்று வியாபாரம் பார்க்கவும் தொடங்கினார். அப்போது  அமைச்சர் ஐ.பி.யிடம் பொருட்களை வாங்கப் பொதுமக்களும் கட்சிக்காரர்களும்  போட்டிப் போட்டு கொண்டு வாங்கி சென்றனர். அதைக்கண்டு பூரித்துப்போன ராமச்சந்திரன் குடும்பத்துடன் அமைச்சரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்