தமிழக முதல்வரின் கனவு திட்டமான காலை சிற்றுண்டி திட்டத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதிக்கு உட்பட்ட அசூர் ஊராட்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தினை துவக்கி வைத்தார். மேலும் இதனை அடுத்து தமிழக முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் காலை சிற்றுண்டி திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அசூர் ஊராட்சியில் ஸ்ரீ முருகன் அரசு உதவி பெறும் பள்ளியில் திட்டத்தினை துவக்கி வைத்தார். இப்பள்ளியில் 64 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர் பேபி மற்றும் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், தலைமை ஆசிரியர் சுமதி உட்பட மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, தாசில்தார் ஜெயபிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன் ஸ்ரீதர் , தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், அசுர் ஊராட்சி மன்ற தலைவர் ராணி குமரகுரு உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.