பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுதலை செய்ய வேண்டும்: முத்தரசன்
இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், தந்தையின் உடல்நலம் பொருட்டு பரோலில் விடுவிக்கப்பட்டார். பேரறிவாளன் தாயார், தமிழக அரசுக்கு விடுத்த வேண்டு கோளை ஏற்று மேலும் 1 மாதம் காலம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
மேலும் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் முருகன், சாந்தன் ஆகிய அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் நிரந்தமாக விடுதலை செய்ய உரிய முன் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மரணதண்டனை, நீண்ட நெடுங்கால சிறைதண்டனைகள் குறித்த மறுசிந்தனைகள் இன்றைய உலகில் உருகொண்டுள்ள சூழலை கவனத்தில் கொண்டு, மத்திய அரசும் தனது நிலைபாடுகளை தளர்த்தி கொண்டு சாந்தன், பேரறிவாளன், முருகன் என அனைவரையும் நிரந்தரமாக விடுதலை செய்ய உரிய வழிவகைகளை காண வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்