எம்ஜிஆர் சிறப்பு தபால் தலை வெளியீடு!
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்,அமைச்சர்கள் எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த தபால் தலையை முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.