எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வுக்கு அனுமதி மறுப்பு
கடலூர் அமைச்சர் எம்.சி.சம்பத் இடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியை விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வனுக்கு வழங்கினார் தினகரன். அதையடுத்து விருத்தாசலம் மற்றும் கடலூரிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க தினகரன் ஆதரவாளர்கள் காவல் துறையில் அனுமதி கேட்டிருந்தனர். அதே சமயம் எடப்பாடி தரப்பினரும் அனுமதி கேட்டனர். அதையடுத்து பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க இருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வி.டி.கலைச்செல்வனுக்கு போலீசார் தடை விதித்தனர்.
- சுந்தரபாண்டியன்