எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: கலைஞருக்கு அழைப்பு..!
தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுதும் எம்.ஜி.ஆர். ,நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 19ம் தேதி திருவாரூரில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் தி.மு.க, எம்.எல்.ஏ.,க்கள் 3 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
திருவாரூர் எம்.எல்.ஏ., திமுக தலைவர் கலைஞர், திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ., ஆடலரசு, மன்னார்குடி எம்எல்ஏ., ராஜா ஆகியோரின் பெயர்கள் வாழ்த்துரை பகுதியில் இடம்பெற்றுள்ளன. இவர்கள் மூவருக்கும் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.