Published on 23/10/2021 | Edited on 23/10/2021
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியை நெருங்கிவருகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 13,477 கன அடியிலிருந்து 39,634 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 62.02 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக நீர் திறப்பு 550 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.