Published on 24/10/2021 | Edited on 24/10/2021
தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு அணைகள் நிரம்பி வருகின்றன. அதேபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்ட உள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 64.42 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 39.534 கன அடியிலிருந்து 28,650 கன அடியாகக் குறைந்துள்ளது. அதேபோல் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 550 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.