சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை இம்மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, கோவையைத் தொடர்ந்து சேலத்தில் 40 கி.மீ நீளத்திற்கும், திருச்சியில் 38 கி.மீ. நீளத்திற்கு என தலா இரு மெட்ரோ வழித்தடங்கள் அமைப்பதற்கான ஆய்வுகள் நடந்து வந்தன. மேலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மெட்ரொ ரயில் நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமீபத்தில் தமிழக அரசிடம் சமர்ப்பித்திருந்தது. இதையடுத்து மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.