Skip to main content

கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில் சேவை; விரைவில் சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Metro Rail Service between Koyambedu Avadi Feasibility report submission soon

 

சென்னை கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னையின் புறநகர் பகுதிகளையும் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி சிறுசேரி - கிளாம்பாக்கம், பூவிருந்தவல்லி - பரந்தூர், கோயம்பேடு - ஆவடி ஆகிய பகுதிகளையும் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு - ஆவடி இடையே 43 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை தமிழக அரசிடம் விரைவில் வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஆய்வு செய்து மெட்ரோ ரயில் இயக்க தமிழக அரசு உரிய ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மதுரை, கோவையைத் தொடர்ந்து சேலம், திருச்சியில் மெட்ரோ வழித்தடங்கள் அமைப்பதற்கான ஆய்வுகள் நடந்து வந்தன. மேலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கைப் பணிகள் முடிந்துள்ள நிலையில், மெட்ரோ நிறுவனம் சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்