மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:
பள்ளி மாணவர் உட்பட 4 பேர் கைது!
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகிலுள்ள குருக்குபட்டி கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளியின் 15-வயது பெண் குழந்தை சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இதனால் ஐட்ன்ஹாம் வகுப்பு வரை பள்ளிக்கு அனுப்பியவர்கள் தற்போது, சிறுமியை வெளியில் எங்கும் அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து வளர்த்து வருகின்றனர்.
புதன்கிழமை சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அப்போது அவரது வீட்டுக்கு வந்த உள்ளூரை சேர்ந்த ஒரு பள்ளி மாணவர் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள், அந்த சிறுமியிடம் கொத்து பரோட்டா வாங்கிக் கொடுப்பதாக கூறி சிறுமியை வெளியே அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கடைக்கு சென்று பரோட்டா வாங்கிக்கொண்டு. அந்த சிறுமையை அங்கேயுள்ள மயானத்துக்கு சிறுமியை அழைத்துச் சென்ற பள்ளி மாணவர் உள்ளிட்ட நால்வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த சிறுமியிடம் மிகவும் கொடூரமான முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, அந்த வழியாக வந்த ஒருவர், சிறுமியை இளைஞர்கள் பாலியல் கொடுமை செய்வதைப் பார்த்து சத்தமிட்டுள்ளார். இதையடுத்து, சிறுமியை அப்படியே விட்டுவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் அந்த சிறுமியை மீட்ட அவர், வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுள்ளார். மேலும், நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகார் குறித்து ஓமலூர் டி.எஸ்.பி பாஸ்கரன், தாரமங்கலம் காவல் ஆய்வாளர் குமரன், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில், மனநலம் பாதித்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உண்மை என்று தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குருக்குபட்டி கிராமம் கோனேரிவளவு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குமார் (வயது-20), தாமரைச்செல்வன் (வயது-20), வேடிச்சி (வயது-22) மற்றும் 18 வயது பள்ளி மாணவர் உள்பட நான்கு பேரையும் தாரமங்கலம் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து விசாரணி மேற்கொண்டுள்ளனர்.
- பெ.சிவசுப்பிரமணியம்