Skip to main content

எச்.ராஜாவுக்கு உயர் ரத்த அழுத்த சிக்கலா? மனநல சிக்கலா? திருமாவளவன் சந்தேகம்!

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
vajpayee



பெரியார் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பலர் மரியாதை செய்தனர். இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்டது.
 

பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அக்கட்சியினர் பெரியார் சிலையை அவமதித்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பெரியார் பற்றி இழிவாக பேசிய ஹெச்.ராஜாவையும் கைது செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

பா.ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா அண்மை காலமாக வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார். மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கிறோம் என்கிற அகந்தை அவருடைய நடவடிக்கைகளில் மேலோங்கி நிற்கிறது.
 

பெரியாரை, அண்ணாவை, கலைஞரை என திராவிட இயக்க தலைவர்களையும் இடதுசாரி உள்ளிட்ட ஜனநாயக சக்திகளையும் மிக கடுமையாக மூர்க்கமாக விமர்சித்து வருகிறார். தற்போது திருமயம் அருகே காவல்துறையினரையும் உயர்நீதிமன்றத்தையும் பொதுமக்கள் முன்னிலையில் அநாகரீகமாக பேசி இருக்கிறார்.

 

Thol. Thirumavalavan

சிறைத்துறைக்கும், காவல்துறைக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் சிறையில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை சொல்ல காவல் துறையினருக்கு வெட்கம் இல்லையா? என்று கேட்கிறார்.
 

உயர்நீதிமன்றம் கூட்டம் போட தடை விதித்து இருக்கிறது என்று சொன்ன போதும் உயர்நீதி மன்றத்தை கொச்சையாக தடை விதிக்கப்பட்ட இடத்திலேயே கூட்டம் நடத்துவேன் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார். என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவிற்கு முகம் சுழிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது.
 

மத்தியில் ஆட்சி நடத்துகிறோம் என்கிற மமதையும், தமிழக அரசு ஒரு கையாலாகாத அரசு என்கிற அலட்சியமும்தான் அவருடைய இந்த போக்கிற்கு காரணங்களாக உள்ளன.
 

அவர் உயர் ரத்த அழுத்த சிக்களுக்கு ஆளானவராகவோ அல்லது மனநல சிக்களுக்கு ஆளானாவர்களாகவோ இருக்க வேண்டும் என்கிற சந்தேகம் வருகிறது.
 

எனினும் அவர் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
 

உடனடியாக அவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். அரசு இனியும் மெத்தனம் காட்டினால் மதவாத சக்திகள் தமிழகத்தின் அமைதியை சீரர்குலைப்பார்கள் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்