Skip to main content

திமுகவால்தான் எம்பியானேன்.. கே.எஸ்.அழகிரி விமர்சனத்திற்கு வைகோ பதில்!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்கில் வாதாடிய பிறகு இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில்,

என் வாழ்வில் இதுபோன்று இதுவரை மூன்று மணிநேரம் வாதாடியதில்லை. என்னுடைய சிறந்த வாதத்தை எடுத்துவைத்திருக்கிறேன். தீர்ப்பு நீதிபதிகள் கையில் உள்ளது. இன்று நான் கேள்விப்பட்டேன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் தயவால்தான் எனக்கு மாநிலங்களவை எம்பி பதவி கிடைத்தது என்று கூறியுள்ளார். நான் ஒன்றை தெளிவுபடுத்த நினைக்கிறேன்.

 

VAIKO ANSWER TO KS.ALAKIRI

 

இது தவறு, அவர் ஆத்திரத்தில், கோபத்தில்,  என்மீது உள்ள வன்மத்தில் அப்படி பேசியிருக்கிறார் . திமுகவிற்கு 108 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஒரு ராஜ்யசபா எம்பியை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் போதும். திமுக என்னை தேர்ந்தெடுத்து அனுப்பியது. ஸ்டாலினும், திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் ப்ரொபோஸ் செய்திருக்கிறார்கள். ஒரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட கிடையாது. திமுக எம்எல்ஏக்கள் அனுப்பியுள்ளார்கள். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் என்னை அனுப்பவில்லை. காங்கிரஸ் தயவில் நான் சென்றதில்லை. இரண்டும் முறையும் வாஜ்பாயியுடன் கூட்டணி வைத்துதான் லோக்சபாவில் போட்டியிட்டேன்.1998லும் வாஜ்பாயுடன் தான் கூட்டணி அதிமுக, 1999லும் வாஜ்பாயுடன் தான் திமுக கூட்டணி. காங்கிரஸ் தயவுடன் நான் ஒருபோதும் எம்பியாக போட்டியிட்டதில்லை, போட்டியிடவும் மாட்டேன். 

ஒரு இனத்தையே அழித்த பாவிகள் இந்த காங்கிரஸ்காரர்கள். நான் காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் சின்ன வயதில் இருக்கும்போது காமராஜர் எங்கள் வீட்டில்தான் தங்குவார். அவர் தங்குவதற்காக குளியலறை கட்டினோம். இப்படி காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன். ஆனால் மாணவனாக அண்ணாவின் திமுகவில் சேர்ந்தவன். கோபம்வந்தால் வேறு  எதாவது திட்டி தீர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்னை ராஜ்யசபாவிற்கு அனுப்பியதாக சொல்லாதீர்கள்.

அமித்ஷா சொல்லிதான் நீங்கள் நாடாளுமன்றத்தில் பேசினீர்கள் என இவிகேஎஸ் இளங்கோவன் சொல்லியிருக்கிறார் என்ற கேள்விக்கு,

அற்ப புத்தி உள்ளவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. மோடியை சந்தித்தபோது காஷ்மீர் பிரச்சனையில் உங்களை எதிர்த்து ஓட்டுபோடுவேன் என சொன்னேன். டாம் சேஃப்டி பில் கொண்டுவந்தால் இந்தியா துண்டு துண்டாக உடையும் என்று சொன்னேன். நியூட்ரினோ கொண்டுவந்தால் எங்கள் தென் நாடு அழியும் என்று சொன்னேன். நேருக்கு நேராக சொன்னேன், உங்களை எதிர்த்து ஓட்டுபோடுவேன் என்று. காங்கிரஸ் கட்சியிலே 12 பேர் லோக்சபாவிலே காஷ்மீர் விவகாரத்தில் ஓட்டுப்போடாமல் ஓடிப்போய் விட்டார்களே எவ்வளவு காசு வாங்கினார்கள்.

நான் எந்த காலத்திலும் எங்கேயும் கொள்கையை விட்டுக்கொடுக்காதவன் என்று இந்த உலகமே அறியும் என்றார்.

  

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்