திருப்பூர் எம்.பி.சத்யபாமாவை அவரது கணவர் கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகரில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா வசித்து வருகிறார். இந்நிலையில் அவரை கணவர் வாசு கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக சத்தியபாமாவின் சகோதரர் சண்முகபிரபு கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சத்தியபாமாவின் கணவர் வாசுவை கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சத்தியபாமாவுக்கும், வாசுக்கும் 1990ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கணவர் வாசு, சத்தியபாமாவை கொலை செய்ய முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.