மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வழியாக செல்லும் ரெயில் இரவு திருச்சிக்கு வந்து புறப்பட்டது. ரெயிலில் எஸ்.10 பெட்டியில் 30 வயது மதிக்கத்தக்க கன்னியாஸ்திரி ஒருவர் உறவினர்களுடன் திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு பயணம் செய்தார்.
திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், கன்னியாஸ்திரி கழிப்பறை பக்கம் சென்றார். அப்போது, அவரிடம் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த கன்னியாஸ்திரி யாரிடமும் எதுவும் சொல்லாமல் பெங்களூர் சென்றவுடன் ரயில்வே அதிகாரி என்னிடம் ரயில்வே டிடி ஒருவர் தவறாக நடந்துள்ளார் என்று புகார் சொல்லியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீசாருக்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்து, சம்பந்தப்பட்ட நபர் யார்? என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் “சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி புகார் எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் அந்த ரெயிலில் பணியில் டிக்கெட் பரிசோதகராக இருந்ததாக தகவல் வந்தது. அவர் யார்? என தெரியவில்லை. அவர் உண்மையிலேயே டிக்கெட் பரிசோதகர் தானா? அல்லது வேறு நபரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரயிலில் இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்காக போலிசார் ரயில்களில் சோதனையை அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.