தொன்மையும் பழமையும் கொண்ட பிரசித்தி பெற்ற சைவமடங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தின் மடாதிபதி வயோதிக காரணமாக இயற்கை எய்தியிருப்பது ஆன்மீக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் உள்ள தருமபுரத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த தருமை ஆதீனம். அந்த ஆதீனத்தின் 26 வது குருமகா சன்னிதானமாக இருந்துவத்தார் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். அவர் இன்று பிற்பகல் வயோதிகத்தால் இயற்கை எய்தியிருக்கிறார். 93 வயதான அவர், கடந்த சில தினங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். அவரை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். வயோதிகத்தால் சிகிச்சை பலனின்றி இன்று மாலை இறந்திருக்கிறார்.
1926 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிறுகாட்டூரில் பிறந்த இவர். விருதாச்சலம் தேவாரப் பாடசாலையில் படித்தார். தர்மபுரத்தில் வித்வான் பட்டம் பெற்றார். அதோடு அங்கேயே கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றிவந்தார். தேவஸ்தானத்தில் அதிகநாட்களில் பணியாற்றியவரை கட்டளை தம்பிரான் சுவாமிகளாக நியமித்தனர். அன்று முதல் தருமை ஆதீனத்தின் கட்டளை தம்பிரான்களில் ஒருவராக பணி செய்துவந்தவரை 1971 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுர ஆதீனத்திற்கு இருபத்தாறாவது மடாதிபதியாக பொறுப்பேற்க செய்தனர்.
49 ஆண்டுகள் மடாதிபதியாக பதவி வகித்து, ஆதீனம் அதனை சுற்றியுள்ள சொத்துக்கள், கல்லூரிகளை நிர்வகித்துவந்தவர். வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
காசி வரை சொத்துக்களைக் கொண்டிருக்கும் தருமபுரம் ஆதீனத்திற்கு திருக்கடையூர், வைத்தீஸ்வரன் கோயில், திருநள்ளாறு , உள்ளிட்ட புகழ்பெற்ற 27 ஆலயங்கள் இருக்கின்றன. அதன்மூலம் கோடி கோடியாக வரும் வருமானத்தையும், அதன் சொத்துக்களையும் திறம்படவே நிர்வாகித்துவத்தார். ஏற்கனவே இரண்டுமுறை உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் மடத்திற்கு வந்து ஆன்மீகப் பணியில் இருந்துவந்தார்.
இதற்கிடையில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்ட ஆதீனம், கட்டளை தம்பிரானாக தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு மடத்தில் இருந்த ஹீலஹீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவமாகிகளை 2017 பிப்ரவரி மாதம் ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமித்து அனைத்து பூஜைகளையும் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.