Published on 02/05/2022 | Edited on 02/05/2022
மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி திருவானைக்கோவிலில் பரத கலைஞர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள், புல்லாங்குழல், மிருதங்கம், வயலின் இசைக் கலைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து போ சம்போ பாடலுக்கு இசை அமைத்து உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
உலக சாதனை பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டு இந்த சாதனை இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ கலைமாமணி டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், கலைமாமணி ரேவதி முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்கள்.