
நடிகர் கமல் எதிர் வரும் 21 ந் தேதி முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் இல்லத்தில் தனது கட்சி பெயரை அறிவித்து மாலையில் மதுரையில் மாநாடு நடத்த உள்ளார். அதற்காக தமிழகத்தில் உள்ள பல தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றும் வருகிறார்.
இந்த நிலையில் அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பொதுமக்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் மாவட்டத் தலைவர் கமல் சுதாகர் தலைமையில் ஆயிரக்கணக்கில் அச்சடிக்கப்பட்ட கட்சி அறிவிப்பு மற்றும் மாநாடு அழைப்பிதழை பேருந்து நிலையத்தில் உள்ள மங்கள விநாயகர் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்த பிறகு நகர் முழுவதும் அழைப்பிதழில் வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து அழைத்து வருகின்றனர்.
தங்கள் வீட்டு விழா போல கமல் ரசிகர்கள் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பிதழ் கொடுப்பது பரபரப்பாக உள்ளது.
- இரா.பகத்சிங்