இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி முதலில் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைந்த பிறகு சென்னை சென்ட்ரல் - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இன்று இரவு சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்காமல் மூடப்பட்டது. இதனால் மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.