




Published on 20/02/2020 | Edited on 20/02/2020
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பேரணிகளும் ஆர்பாட்டங்களும் நடைபெற்றுவருகிறது. நேற்றைய தினம் தமிழம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணிகள் நடத்தப்பட்டன. சென்னையில் தடையை மீறி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் பேரணி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.