Published on 24/02/2019 | Edited on 24/02/2019
மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகத்தின் ஜெ. பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் இளைஞரணி ஜெயஆனந்த் திவாகரன் பேசும் போது..

திராவிட கட்சிகள் வேண்டாம் என்கிறார்கள். அது தவறு திராவிட கட்சிகள் ஆட்சியில் இருப்பதால் தான் தமிழர்கள் வடநாட்டுக்கு வேலைக்கு போகவில்லை. ஆனால் வடநாட்டார் வருகிறார்கள். தமிழக அரசியலுக்கு கேன்சர் வந்துள்ளது. அதாவது.. ஓட்டுக்கு பணம் என்ற கேன்சர். இந்த கேன்சரை ஒழிக்க ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முதல் வேட்பாளரை மக்கள் புறக்கணித்து பிடித்து கொடுத்தால் அடுத்த வேட்பாளர் பணம் கொடுக்க மாட்டார். மக்களிடம் அறியாமை அதிகமாக உள்ளது. இப்படியே போனால் நம் சந்ததிக்கு கள்ளாபெட்டியை கொடுக்க முடியாது சவப்பெட்டியை தான் கொடுத்துவிட்டு போவோம் என்றார்.


