Skip to main content

மணற்கேணி செயலி இன்று அறிமுகம்

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

Manalkeni app launched today

 

நாட்டிலேயே முதன்முறையாகப் பாடங்களைக் காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது. நம் கல்வி முறையில் உயர்தரமான டிஜிட்டல் பாடங்களை உருவாக்கவும், இருப்பில் வைப்பதும், வகுப்பறைகளை மேலும் மேம்படுத்தவும், சுவாரஸ்யமானதாக மாற்றவுமே காணொலிப் பாடங்களைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கென உள்ள பாடங்களை 27 ஆயிரம் கருப்பொருள்களாக, வகுப்புகள் தாண்டி வகை பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப் பாடங்களை உருவாக்கி அளித்திருக்கிறது.

 

நாட்டிலேயே முதன் முதலாக ஒரு மாநில அரசு தன்னிடமுள்ள வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கியுள்ள இத்தகைய செயலி இதுவாகும். இச்செயலியைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் அதில் உள்ள பாடப்பொருட்களின் துணைகொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம். இந்த முன்னெடுப்பின் மூலம் 25 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்செயலிக்கு மணற்கேணி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘மணற்கேணி’ செயலி வெளியீட்டு விழா செங்கல்பட்டு மாவட்டம் சேலையூரில் உள்ள தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி வெளியீட்டு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்க உள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்