தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று (26/2/2021) சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகளும் அமலுக்கு வந்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்நிலையில் மார்ச் 1 முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் நடைபெறும் நேர்காணலை சுரேஷ் அய்யர், பொன்ராஜ், ரங்கராஜன், செந்தில் ஆறுமுகம் ஆகியோர் நடத்த உள்ளனர். அதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7 -ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.