Published on 29/12/2020 | Edited on 29/12/2020
ரஜினி எடுத்த முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "ரஜினி எடுத்த முடிவில் சற்று ஏமாற்றம் இருந்தாலும் அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். காமராஜருக்கு பிறகு வந்த அனைவருமே சினிமாக்காரர்கள்தான். மக்கள் அளித்த வரவேற்பை பார்க்கும் போது தமிழகத்திற்கு மாற்றம் நெருங்கிவிட்டது என்பதை உணர்த்துகிறது. என் ரஜினி நலமாக இருக்க வேண்டும்; எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும். பிரச்சாரப் பயணம் முடிந்த பிறகு சென்னை சென்றவுடன் அவரை சந்திப்பேன்; ரஜினிகாந்தைச் சந்தித்த பிறகு உங்களுக்கு செய்தி சொல்கிறேன்" என்றார்.