மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் செயல்பட்டு வந்த இதயம் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் மையத்திலிருந்து இரண்டு குழந்தைகள் பணத்திற்கு விற்பனைச் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டவிரோதமாகக் குழந்தைகளை வாங்கிய கல்மேடு பகுதியைச் சேர்ந்த சகுபர்சாதிக்- அனிஸ்ராணி தம்பதியினர், இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன்- பவானி தம்பதியினர் மற்றும் இதயம் அறக்கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பாளரான கலைவாணி, முகவர்களாக செயல்பட்டு வந்த செல்வி, ராஜா என 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்துவதற்கு முன்பாக மதுரை அரசு கரோனா மருத்துவமனைக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதனிடையே வழக்கின் முக்கிய குற்றவாளியான இதயம் அறக்கட்டளையின் நிறுவனர் சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளர் மாதார்ஷா ஆகிய இருவரையும் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.