தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ - (தொழிலாளர் மேலாண்மை) ,எம்.ஏ - ( தொழிலாளர் மேலாண்மை) பட்டப்படிப்புகள் மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ ( தொழிலாளர் நிர்வாகத்தில் முதுகலை மாலை நேர பட்டயப்படிப்பு ) , D.L.L & A.L . (தொழிலாளர் சட்டங்களும் , நிர்வாகவியல் சட்டமும் ) வார இறுதி பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றனர். இதே போல் பி.ஏ (தொழிலாளர் மேலாண்மை) , எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) உள்ளிட்ட படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பி.ஜி.டி.எல்.ஏ மற்றும் டி.எல்.எல் உள்ளிட்ட படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ஏ (தொழிலாளர் மேலாண்மை) , எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ ஆகி பட்ட மற்றும் பட்டயப்படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வி தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது . இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் தற்போது மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு தொழிற்சாலை நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மேலே குறிப்பிட்ட கல்வி தகுதி முக்கியம் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இத்தகைய கல்வியை பயில விருப்பமுள்ள +2 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பிற்கும் , ஏதேனும் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் முதுகலைப்பட்ட மற்றும் பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண்கள் மற்றும் அரசு விதிகளின் படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பங்கள் வழங்கும் தேதி : 15/04/2019 . பி.ஏ (எல்.எம்) பூர்த்திச்செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் இறுதிநாள் : 30/05/2019 மாலை 5.00 மணி வரை. எம்.ஏ/ பி.ஜி.டி.எல்.ஏ/ டி.எல்.எல் பூர்த்திச்செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் இறுதிநாள் : 28/06/2019 மாலை 5.00 மணி வரை. விண்ணப்ப கட்டணம் (நேரில்) - ரூபாய். 200. (SC/ST) விண்ணப்ப கட்டணம் (சாதிச்சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் ) - ரூபாய் 100.
தபால் மூலம் விண்ணப்பத்தை பெற விரும்புவோர்கள் (விண்ணப்ப கட்டணம் + தபால் கட்டணம் ரூபாய் 50யை) வங்கியில் செலுத்தி வரைவோலை "The Director ,Tamilnadu Institute Of Labour Studies , Chennai -600005" என்ற பெயருக்கு வங்கி வரைவோலை எடுத்து அனுப்பி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு :
ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை),
முனைவர். இரா.ரமேஷ்குமார் , உதவி பேராசிரியர் ,
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் ,
No 5 ,காமராசர் சாலை ,
சென்னை - 600 005.
Mobile No : 98841- 59410.
Lane Line No: 044 - 28440102 ,
044- 28445778 ,
e-mail : tilschennai@tn.gov.in.
பி.சந்தோஷ், சேலம்.