Skip to main content

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்த சகாயம் குழுவை முடித்துவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவு

Published on 17/03/2018 | Edited on 17/03/2018

 

Sagayam



மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக மட்டும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நியமித்தது. நீதிமன்ற உத்தரவுபடி, விசாரணையை முடித்து சகாயம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கிரானைட் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுதொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
 


இந்நிலையில்  பி.ஆர்.பி. உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்களின்   அனைத்து  கணக்குகளையும் முடக்க வேண்டுமெனவும், அவற்றின் சரக்குகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க கூடாது என்று டிஎஸ்பி ரிசர்வ் வங்கிக்கும், துறைமுகங்கள் துறைக்கும் கடிதம் எழுதியுள்ளார்.  இதை  ரத்து செய்யக்கோரி பி.ஆர்.பி. நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 
 


இந்த வழக்கு வெள்ளியன்று  நீதிபதி சிவஞானம், நீதிபதிஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பி.ஆர்.பி. நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அதன் கோரிக்கை குறித்து உரிய அரசு துறைகளை அனுகும் படி உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் சகாயம் குழுவின் விசாரணையை முடித்து வைத்த நீதிபதிகள், விசாரணைக்கு தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். 
 

சார்ந்த செய்திகள்