அரியலூரில் தனியார் பயிற்சி நிலையத்தில் தமிழ்வழிக்கல்வி இயக்கம் சார்பில் நேற்று (20.02.2023) உ.வே.சா பிறந்தநாள் விழாவும், உலகத்தாய் மொழி நாள் விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிழச்சிக்கு தமிழ்க்களம் நிறுவனர் புலவர் அரங்கநாடன் தலைமை தாங்கினார்.
மொழி அறிஞர் மா.சோ.விக்டர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில், "உ.வே.சா அவர்கள் தமிழ்மொழி வரலாற்றில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளார். அவரின் தமிழ் பணிக்கு நமது அரியலூர் மண் பெரும்பங்காற்றி உள்ளது. அது மட்டுமல்லாமல் நமது அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் வாழ்ந்த தமிழ் அறிஞர்கள் தான் உவேசா அவர்கள் இங்கு இருந்து கொண்டுதான் தமிழ் கற்று கொடுத்து அவர்களின் தமிழ்ப்பணிக்கு பெரும் துணை புரிந்துள்ளார். உ வே சா அவர்களின் கரங்களுக்கு கிட்டாத கணக்கில் அடங்கா ஓலைச் சுவடிகள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் பாதுகாக்கப்படுகிறது. அவை அனைத்தையும் மீட்டுக் கொண்டு வந்து நாம் அச்சிட்டு அதை வெளிக்கொணர்ந்தால் உலகில் தமிழரின் வரலாற்றில் மேலும் ஒரு புதிய திருப்புமுனை உருவாகும்" என்று இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் காந்திமதி, ஓவியர் முத்துக்குமரன். தமிழ்ச்சித்தர் துரைவேலூசாமி, கவிஞர் அறிவு மழை, ஓவியர் அன்பு சித்திரன் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக அனைவரையும் தமிழ்க்களம் இளவரசன் வரவேற்றார்..இறுதியாக ஆசிரியர் பாண்டியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.