Published on 11/07/2018 | Edited on 11/07/2018
‘பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ?’ என்று ரசனையுடன் சினிமாவுக்கு பாடல் எழுதினார் கவிஞர் கண்ணதாசன். உலகம் முழுமைக்குமே உரித்தான இந்தப் பெண்ணார்வத்தை, மிகச் சரியாகப் பயன்படுத்தி வருவது திரை உலகம்தான்.

சினிமா நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், பின்னழகை மட்டுமே காட்டும் நடிகை ஒருவரின் படத்தைப் பதிவு செய்து, ‘இவர் யாராக இருக்கும்?’ என்று கேட்டிருக்கிறார். தமிழ்ப்படம் 2-ல் வரும் ஒரு காட்சி போலும். யாருக்குத் தெரியும்? ஒருவேளை கஸ்தூரியாகவும் இருக்கலாம். அந்த நடிகை போட்டோவில், முதுகை சிறிதளவே மறைக்கின்ற ஆடையில் உள்ள முடிச்சு போலவே, ‘இவர் யார்?’ என்பதும் மர்ம முடிச்சாக இருக்கிறது.
பெண் என்றாலே புதிர்தான்! நாளை தமிழ்ப்படம் 2 வெளிவரவிருக்கும் நிலையில், போடுங்க போடுங்க.. நடிகை போட்டோவை போட்டு நல்லாவே புதிர் போடுங்க!