Skip to main content

உள்ளாட்சி தேர்தல் - ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திமுக, அதிமுக கோரிக்கை

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

jkl

 

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் துரித கதியில் செய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகள் இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 10 மாநகராட்சிகள் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்தும் நிறைவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இதற்கிடையே இன்று மாநில தேர்தல் ஆணையத்தில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக திமுக, அதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒரே கட்டமாக தேர்தலைத் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்