Skip to main content

அக் 7 முதல் 13 வரை மீனவர்கள் மத்திய அரபிக்கடலுக்கு செல்லவேண்டாம்- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published on 07/10/2018 | Edited on 07/10/2018

 

weather

 

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,

 

மினிக்காய் தீவுகளுக்கு வடமேற்கில் சுமார் 920 கிமீ தூரத்தில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ஓமன் கரையை நோக்கி நகரக்கூடும். மேலும் தற்பொழுது வட அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒரிசா கரையை நோக்கி நகரும். மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய அரபி கடல் பகுதிகளுக்கு அக்டோபர் 7 முதல் 13-ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

அடுத்துவரும் இரு தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. குமரி, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனக்கூறினார்.  

சார்ந்த செய்திகள்