ரஜினி மனைவியின் மானம் உச்சநீதிமன்றத்தில் போய்விட்டது, இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாரா? என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,
ரஜினிகாந்த என்கிற ஆள் ஒன்றுமே கிடையாது. அவரது மனைவியின் மானம் உச்சநீதிமன்றத்தில் போய்விட்டது. இவர்தான் ஊழலை ஒழிக்கப் போகிறாரா?
பாஜக இப்போது தமிழகத்தில் இருக்கிறதா? தமிழக பாஜக விருந்தோம்பல் மையம் போன்று செயல்படுகிறது. தமிழக பாஜக தலைவராக தற்போதுள்ள தலைவரே தொடர்வதால் எந்த வித்தியாசமும் இல்லை. வேறொரு தலைவர் வந்தாலும் அங்கிருக்கும் ஒருவர்தானே வரப்போகிறார்.
யாரெல்லாம் கட்சிக்குப் பலன் காட்டவில்லையோ அவர்களையெல்லாம் வெளியேற்ற வேண்டும் என்பது என் கருத்து. புதிதாக யாரையாவது கொண்டு வந்தால் தான் பாஜகவுக்கு நல்லது. இந்துத்துவத்திற்கு எதிர்காலம் இருக்கிறது. அதனால், இந்து ஒற்றுமையை உருவாக்கும் கட்சிக்குத் தான் எதிர்காலம் உள்ளது. தமிழகத்தில் பாஜகவால் அதனைச் செய்ய முடியாது.
ஏனென்றால் அங்கிருப்பவர்கள் அனைவருக்கும் ஜால்ரா போடுகின்றனர். இந்துக்களுக்கு சாதகமாக இருக்கிறதோ இல்லையோ எல்லாவற்றையும் தமிழக பாஜக அறிக்கையாக வெளியிடுகின்றது. இந்துத்துவாவுக்காக தமிழக பாஜக செயல்பட முடியாது.