Skip to main content

தீபாவளியை முன்னிட்டு கோடிகளில் வசூலை குமித்த டாஸ்மாக்

Published on 13/11/2023 | Edited on 13/11/2023

 

Liquor sales worth Rs 467 crore at Tasmac in two days

 

தமிழக அரசின் வருவாயில் மிக முக்கிய பங்காற்றுகிறது டாஸ்மாக். பொதுவாகச் சராசரியாக ஒரு நாளைக்குத் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கின் மூலம் அரசுக்கு ரூ. 100 கோடி கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதிலும் சிறப்பு விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்கள் உள்ளிட்டவையில் டாஸ்மாக்கின் வருமானம் சில நூறு கோடிகள் எகிறும்.

 

அந்த வகையில் நேற்று தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நிலையில் டாஸ்மாக்கில் மதுவிற்பனையும் அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த இரு தினங்களில் மட்டும்  டாஸ்மாக் கடைகளில் ரூ. 467 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள்(11.11.2023) ரூ.221 கோடிக்கும், தீபாவளி அன்று(12.11.2023) ரூ.246 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 

தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகபட்சமாக மதுரையில் ரூ.52 கோடியும், சென்னையில் ரூ.48 கோடிக்கும், கோவையில் ரூ.40 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தீபாவளி அன்று அதிகபட்சமாகத் திருச்சியில் ரூ.55 கோடிக்கும், சென்னையில் ரூ.52 கோடிக்கும், மதுரையில் ரூ.51 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்