Skip to main content

ஓரின சேர்க்கைக்கு ஒத்துழைக்க மறுத்த சிறுவனை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் வசித்து வந்தவர் கந்தசாமி.  இவரது மகன் ரவிபிரகாஷ்(16), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள சிதம்பரம் செட்டியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

 

prison


கடந்த 21.4.2014 அன்று இரவு  ரவிபிரகாஷ்  டியூசன் முடித்து விட்டு வீட்டிற்கு வந்து வீட்டிற்கு பக்கத்தில் உள்ள சந்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு படிக்கட்டு வழியாக மேல் வீட்டிற்கு செல்வதற்காக  சென்றபோது முதல் தளத்தில் குடியிருந்த ஜவஹர்பாபு (33) என்பவர். சிறுவனிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறி  வலுக்கட்டாயமாக தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.  பின்னர் கதவை சாத்திவிட்டு சூரிய பிரகாஷை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அவனுடன் ஓரினச்சேர்க்கை செய்ய முற்பட்டபோது சிறுவன் அதற்கு மறுத்து தப்பி செல்ல முயன்றான்.  அப்போது  சவுக்கு கட்டையால் சிறுவனின் தலையின் பின்புறம் ஓங்கி அடித்ததில் சிறுவன் மயக்கமானான்.  மயங்கிய நிலையில் இருந்த அவனது ஆடைகளை கலைத்து, அவனுடன் ஓரினச்சேர்க்கை செய்ய முயற்சித்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுவன் சத்தம் போட்டதால் அவனது கழுத்தில் கையை வைத்து அழுத்தி, மேலும் மேலும் சவுக்கு கட்டையால் தலையில் அடித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.


தலையில் ஏற்பட்ட காயத்தாலும்,  கழுத்தில் ஏற்பட்ட அழுத்தத்தாலும் மூச்சு திணறி சிறுவன் அதே இடத்தில் இறந்துவிட்டான்.  இறந்து போன சிறுவனின் சடலத்தை வீட்டில் இருந்த கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார்.  மேலும், சிறுவன் தலையிலிருந்து ரத்தம் வழிந்ததால் கொலையை மறைக்கும் விதமாக தலைப்பகுதியை பாலிதீன் கவர்களால் கட்டி, பின்னர் கை கால்கள் இரண்டையும் மடித்து கட்டி வீட்டில் இருந்த வெள்ளை பிளாஸ்டிக் சாக்குப்பையில் சிறுவனின் சடலத்தை திணித்து மூட்டையாகக் கட்டி வெளியில் வீசிவிட நினைத்து அதற்கு சூழ்நிலையை சரியில்லாத காரணத்தால் அதிகாலையில் பிரேத மூட்டையை தூக்கி சென்று தன்  மனைவி  ஆரவள்ளி நடத்தி வந்த டிபன் கடையின் ஒரு பகுதியில் வைத்து ஷட்டரை மூடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.


இரண்டு நாள் கழித்து  ரவிபிரகாஷின் உறவினரான அகிலா என்பவர் சிறுவனின் செல்போனுக்கு போன் செய்தபோது, சிறுவனின் சிம் கார்டை பயன்படுத்தி ஜவஹர் அகிலாவிடம், '25 லட்சம், பின்னர் 10 லட்சம், பின்னர் 5 லட்சம்'  கொடுத்தால் ரவிபிரகாஷை ஒப்படைப்பதாக கூறி சிறுவனின் தந்தை கந்தசாமியிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் அவர்களை ஒரு இடத்திற்கு வரும்படி அழைத்துள்ளார்.  அகிலா தனது கணவர் மற்றும் சிலருடன் 5 லட்சம் பணத்துடன் சிதம்பரம் பைசல் மஹால் புறவழிச் சாலைக்கு வந்து கொண்டிருந்த போது ரவிபிரகாஷ் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து அவரிடம் பணத்தை கொடுக்காமல் திரும்பி சென்றுள்ளனர்.
 

பின்னர் ரவிபிரகாஷை கொலை செய்த ஜவஹர்பாபுவையும், உடந்தையாக இருந்த மனைவி ஆரவள்ளியையும் காவல் துறை கைது செய்தது. இவ்வழக்கு விசாரணை கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்கறிஞர் செல்வப்பிரியா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் குற்றவாளி ஜவஹர்பாபுவுக்கு ஆயுள்தண்டனையுடன் 85,000 ரூபாய் அபராதாமும், அவரது மனைவி ஆரவள்ளிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்