கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்து கொள்ளும் முன்பு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அக்கடிதம் தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அக்கடிதத்தில், "நான் நன்றாக படிப்பேன், வேதியியலில் நிறையா ஈக்கூவேசனா இருக்கு. எனக்கு ஈக்கூவேசன் படிக்கவே வரவில்லை. அதனால் வேதியியல் ஆசிரியை ரொம்ப பிரசர் பண்ணுனாங்க, ஒருநாள் கணிதம் ஆசிரியையிடம் நான் படிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க, அவங்களும் என்னை பிரசர் பண்ணுனாங்க. விடுதியில் படிகாம என்ன பண்ணுற என்று ரொம்ப திட்டுனாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. நான் படிக்க மாட்டேனு எல்லாரிடமும், இருவரில் ஒருவர் சொல்லிட்டாங்க. இன்று காலை கிளாசுக்கு வந்த ஸ்டாப் ஒருவர் படிக்கவே மாட்டேங்கிறீயா, விளையாட்டு தனமாகவே இருக்கியாமே என்றார். கணிதம் ஆசிரியை என்னை மட்டுமல்ல இங்குள்ள எல்லோரையும் டார்ச்சர் செய்கிறார். சாந்தி மேடம் உங்களுக்கு நான் ஒரு ரிக்கோஸ்ட் வைக்கிறேன். எனக்கு இந்த வருஷத்துக்கு பள்ளி கட்டணத்தை மட்டும் எங்க அம்மாகிட்டை திருப்பி கொடுத்துடுங்க. புத்தகம் , விடுதி கட்டணம் கூட கொடுத்துடுங்க. ஏன்னா நான் இருந்ததே கொஞ்சநாள் தான் பிளீஸ் மேம். சாரி அம்மா, சாமி அப்பா, சாரி சந்தோஷ், சாரி துர்கா என்றுசில பெயர்களும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இருப்பினும் இந்த கடிதம் உண்மையில் மாணவி தான் எழுதினாரா என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.