Skip to main content

வீட்டின் மொட்டை மாடியில் காய்ந்த சிறுத்தை தோல்; தலைமறைவான முன்னாள் கவுன்சிலர்

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

Leopard hunting and skin drying on terrace theni

 

தேனி மாவட்டத்தில் உள்ள வடவீரநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் கவுன்சிலர் துரைப்பாண்டியன். இவரது வீட்டின் மொட்டை மாடியில்  சிறுத்தையின் தோல் காயவைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனத்துறையினர் துரைப்பாண்டியன் வீட்டுக்குச் சென்று பார்த்த போது துரைப்பாண்டியன் வீட்டை பூட்டி தலைமறைவாகி விட்டார்.

 

பின்னர், வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது, அங்கே சிறுத்தையின் தோல் மஞ்சள் பூசி காய வைத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மருத்துவர்களுக்கு தகவலளித்தனர். முதற்கட்ட விசாரணையில் சிறுத்தை தோலை சுமார் ஒரு வாரத்திற்கு முன்பிருந்து மொட்டை மாடியில் காய வைத்து இருப்பது கண்டறியப்பட்டது.

 

Leopard hunting and skin drying on terrace theni

 

இந்த சிறுத்தை எங்கே, எப்போது, யாரால் வேட்டையாடப்பட்டது? எதற்காக சிறுத்தையை வேட்டையாடி மொட்டை மாடியில் காய வைத்திருக்கிறார்கள்? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள வீட்டின் உரிமையாளர் துரைப்பாண்டியனையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்