Skip to main content

மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிறுத்தை... சிசிடிவியில் சிக்கியது!  

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

 Leopard caught on medical college campus ... CCTV!

 

ஈரோட்டில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிறுத்தை புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக கர்நாடக எல்லையில், ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட சாம்ராஜ் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில், நேற்று இரவு வினோத சத்தம் கேட்டது. இதனால் பதற்றமடைந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். அந்த வினோத சத்தம் குறித்து தெரிந்துகொள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதித்தபோது சிறுத்தை ஒன்று கல்லூரி வளாகத்தில் சுற்றித்திரிந்த காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 

வந்திப்பூர் வனப்பகுதியை ஒட்டி சாம்ராஜ்நகர் இருப்பதால், அந்த வனப்பகுதியில் இருந்தே சிறுத்தை வந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்த வழியும், வெளியே சென்றவழியும் வேறு வேறாக இருப்பதால் அது வந்திப்பூர் வனப்பகுதியில் இருந்துதான் வந்ததா இல்லை வேறு ஏதேனும் பகுதியிலிருந்து வந்ததா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

இருப்பினும், சிறுத்தை ஒன்று பல்வேறு பாதுகாப்புகளைத் தாண்டி கல்லூரி வளாகத்தில் கம்பீரமாக உலாவிய அந்த சிசிடிவி காட்சிகள் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்