
பழம்பெரும் நடிகர் நீலகண்டன் என்கிற நீலு உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
நடிகர் நீலகண்டனுக்கு வயது 83. இவர் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து உள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார்.
முகம்மது பின் துக்ளக், என்று தணியும் இந்த சுதந்திர தாகம், உண்மையே உன் விலை என்ன உள்ளிட்ட மேடை நாடகங்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவில் நடிக்க வந்தார். 1969ல் ஆயிரம் பொய் படம் மூலம் அவர் அறிமுகமானார். தொடர்ந்து நூற்றுக்கு நூறு, கவுரவம், அம்மா பொண்ணு, சூர்யவம்சம், காதலா காதலா, தீனா, பம்மல் கே சம்பந்தம், அந்நியன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை மரணம் அடைந்தார். இன்று இறுதி சடங்கு நடைபெறுகிறது.