Published on 01/04/2018 | Edited on 01/04/2018
தூத்துக்குடியில் இயங்கி வரும் தாமிர உருக்கு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஏராளமான நோய்களும் உருவாகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் இன்று 48-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.