பாரதிய ஜனதா கட்சி சார்பில் 'சமத்துவ கிறிஸ்மஸ் பெருவிழா' என்ற தலைப்பில் நிகழ்ச்சி இன்று கீழ்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில். ''தமிழகத்தில் ஜன சங்கத்தின் முதல் தலைவராக இருந்தவர் வி.கே.ஜான் ஒரு கிறிஸ்தவர். வி.கே.ஜான் தான் பாஜக கட்சி வருவதற்கு முன்பு தமிழகத்தில் ஜனசங்கம் இருந்தது என்றால் அதற்கு முதல் தலைவர் அவர்தான். அதன் பின்பு 1980 கால கட்டங்களில் ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சியாக இது மாறி, இன்று பாஜக இந்தியாவில் ஆட்சியில் இருக்கிறது. இந்த சரித்திரம் நமது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் தேர்தலுக்காக, அரசியலுக்காக மதம் என்பது உள்ளே வந்து விட்டது. அதுவும் குறிப்பாக எமர்ஜென்சி காலகட்டத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டத்தின் ஃப்ரீ ஆம்பிள் முதன்முதலாக இந்திராகாந்தி ஒரு திருத்தம் கொண்டுவர முயற்சி செய்தார். முதன்முதலாக 'செக்யூலர் 'என்ற வார்த்தை கொண்டு வந்தார்கள். அதுவரை இந்தியா செக்யூலர் நாடாகதான் இருந்தது. யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை;மதத்தை வைத்து யாரும் அரசியல் செய்யவில்லை. ஆனால் எமர்ஜென்சி காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான 42வது அமெளண்ட்மெண்டில், பாராளுமன்றத்தில் எந்தவித எம்பிக்களும் இல்லாமல் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்ட காலத்தில் கொண்டுவரப்பட்ட ஃப்ரீ ஆம்பிள் 'செக்யூலர்' என்ற வார்த்தை கொண்டு வருகிறார்கள்.
'செக்யூலர்' என்பது என்ன? அது ஒரு குழப்பமான வார்த்தை. நான் மேடையில் இருக்கிறேன்; ஜீயர் மேடையில் இருக்கிறார்; ஷேக் தாவூத் மேடையில் இருக்கிறார்; ஜெய்சிங் மேடையில் இருக்கிறார். அவர்களுடைய மதத்தின் அடையாளங்களை என் மேல் நான் போட்டுக் கொண்டால்தான் செக்யூலரா? அண்ணாமலை அண்ணாமலையாக இருப்பான்;ஜெய்சிங் ஜெய்சிங்காக இருப்பார்;ஷேக் தாவூத் ஷேக் தாவூத்தாக இருப்பார். அவரவர் மதத்தையும் பாரம்பரியத்தையும் அவரவர்கள் பின்பற்றுவதுதான் மதச்சார்பின்மை. தமிழகத்தில் சாதி அரசியல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். எந்த மதத்தையும் யார் மீதும் திணிக்க மாட்டோம். அனைத்து மதத்திலிருந்தும் பாஜகவுக்கு தலைவர்கள் வருவார்கள்'' என்றார்.