Skip to main content

ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்

Published on 18/11/2019 | Edited on 18/11/2019
ச்ட்



பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.  

 

தனது ஸ்டூடியோ கிரீன்ஸ் பட நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வரும் ஞானவேல்ராஜா, வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

 

மேலும், இவ்வழக்கின் மறு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளையராஜாவை நேரில் சந்தித்த கமல்ஹாசன்... (படங்கள்)

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

 

இளையராஜா கடந்த பிப்ரவரி மாதம் சென்னை தீ நகரில் ‘இளையராஜா ஸ்டுடியோ’என்ற பெயரில் ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியிருந்தார் அங்கு தற்போது படங்களுக்கான இசைப்பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதே போல் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன், இசைஞானி இளையராஜவை அவருடைய புதிய ஸ்டூடியோவில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார்.

 

 

 

Next Story

புதிய ஸ்டுடியோவில் முதல் பாடல்... மீண்டும் இளையராஜா!! 

Published on 03/02/2021 | Edited on 04/02/2021

 

The first song in the new studio ... Ilayaraja again

 

பிரசாத் ஸ்டூடியோவிற்கும் இளையராஜாவிற்கும் ஏற்பட்ட மோதல்களை அடுத்து, பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறிய இளையராஜா, இன்று (03.02.2021) புதிய ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவு செய்ய இருக்கிறார் .

 

சென்னையில் உள்ள புதிய ஸ்டூடியோவில் இளையராஜா தனது புதிய பாடலின் ஒலிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். கோடம்பாக்கத்தில் உள்ள பழைய எம்.எம். தியேட்டரில் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ இன்று திறக்கப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான பாடலை ஒலிப்பதிவு செய்கிறார். 

 

வடபழனியில் இருந்த பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றப்பட்டதால், இந்தப் புதிய ஸ்டூடியோவை இளையராஜா உருவாக்கியுள்ளார். பல ஆண்டுகளாக தனது படத்தின் பாடல் பதிவு மற்றும் இசைக்கோர்ப்புப் பணிகளை இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில்தான் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.