சட்டக்கல்லூரி மாணவர்கள், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பிய மனுவில் - ‘தமிழகம் முழுவதும் உள்ள சட்டக்கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். கல்லூரிகளில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு மாணவிகளுக்கு தேர்வு நடத்துவதற்கான அட்டவணையை, டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அட்டவணை கடந்த 3-ஆம் தேதி வெளியியிடப்பட்டது.
இந்த அட்டவணையின் படி, வருகிற 23, 24 ,25 மற்றும் 29-ம் தேதிகளில் இறுதித்தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வை மாணவ-மாணவிகள், அந்தந்த கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு, நேரில் வந்துதான் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். இதற்கான விண்ணப்பங்களை வருகிற 10-ம் தேதி, மாணவர்கள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத வேண்டும் என்ற உத்தரவினால் மாணவர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். தற்போதுள்ள கொரோனா காலத்தில், மாணவர்கள் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதினால் பெரிதும் பாதிப்பு ஏற்படும்.
மாணவர்கள் தேர்வை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்வார்கள். வீட்டில் உள்ள பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோர் பெரும் அச்சத்தில் உள்ளார்கள். கல்லூரிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது கரோனா பிடியில் சிக்கி விடுவானோ மகன் என்று பெற்றோர்கள் அச்சப்படுகிறார்கள். ஆன்லைன் மூலமாகத்தான் தேர்வு நடத்த வேண்டும் எனத் தமிழக அரசு, அந்தந்த பல்கலைக்கழகங்களை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகம், ஆன்லைனில் தேர்வு நடத்தாமல் நேரில் வந்து தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது, மாணவர்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இது தவிர, தேர்வுகள் தொடர்ந்து நடத்துகிறார்கள். இது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதற்காக, தேர்வு மையங்களைத் தேர்வு செய்துள்ளார்கள். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதுதான் தற்போதைய சூழ்நிலையில் சரியாக இருக்கும் என்று மாணவர்கள் கருதுகிறார்கள். எனவே, நேரில் வந்து தேர்வு எழுதவேண்டும் என்ற உத்தரவை டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ரத்து செய்து, ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த வேண்டும்.’ என துணைவேந்தருக்கு, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.