Skip to main content

“கோவில் திருவிழாவில் விபத்து; திமுக அரசின் அலட்சியம்” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 26/04/2025 | Edited on 26/04/2025

 

Edappadi Palaniswami condemns the temple festival accident

காடையாம்பட்டி அருகே பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவரிம் 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண வழங்க வேண்டும் என்றும், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் ,கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும், முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும்  இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது . எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் திமுக அரசுக்கு எனது கண்டனம்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்