அதிமுக அணி சேர்ந்து இருப்பது
தமிழக மக்களுக்கு ஆபத்தானது:
பிரகாஷ் காரத் பேட்டி
மதவாத பா.ஜ.கவுடன் அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கும் அக்கட்சிக்கும் ஆபத்தானது என சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.
கோவையில் இன்று அரசியல் கட்சிகள் இணைந்து துவங்கும் கோவை மக்கள் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரகாஷ்காரத் , அதிமுக இரு அணிகள் இணைப்பு என்பது சந்தர்ப்பவாதம் எனவும், இதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாக கூறியவர், மதவாத பா.ஜ.கவுடன் அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கும் அதிமுக கட்சிக்கும் ஆபத்தானது என தெரிவித்தார். அதிமுகவின் இந்த சர்ந்தப்பவாத முடிவை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் எனவும் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.
- அருள்