Skip to main content

போராட்டக்காரர்களை கடைசி நேரத்தில் விரட்டி, விரட்டி கைது செய்த காவல்துறையினர்!

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
போராட்டக்காரர்களை கடைசி நேரத்தில் விரட்டி, விரட்டி
கைது செய்த காவல்துறையினர்!



புதுக்கோட்டையில் ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்த போராட்டத்தில் இன்றும் மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த சென்றவர்களை போலிசார் வழியில் மறித்தனர். தொடர்ந்து அவர்கள் முன்னேற முயன்ற போது போலீசார் அவர்களை தடுத்து விரட்டியதால் போராட்டகாரர்கள் ஓடத் தொடங்கினர்.

இதையடுத்து ஓடியவர்களை காவல்துறையினர் விரட்டி, விரட்டி சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் போராட்டம் தற்காலிக நிறுத்தம் என்ற அறிவிப்பு வெளியானதால் பரபரப்பு முடிவுக்கு வந்தது.
 
- இரா.பகத்சி்ங்   

சார்ந்த செய்திகள்