2020 புதுவருட தொடக்கத்தில் இளைஞர்கள் புத்தாண்டை உற்சாக மிகுதியில் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல்துறை புத்தாண்டை கொண்டாடுவதற்கு ஒரு சிறப்பு ஏற்பாடு செய்தது. மிகச்சரியாக 12 மணிக்கு நகரின் மையப் பகுதியில் மிகப்பெரிய அளவில் கேக் வைத்து, அந்த கேக்கை குமாரபாளையம் நகர ஆய்வாளராக இருக்கும் தேவி வெட்டினார்.
அப்போது பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் ஹேப்பி நியூ இயர் என பாடிக்கொண்டு வானங்களில் வந்தனர். அவர்களை அழைத்த ஆய்வாளர் எல்லோருக்கும் கேக் கொடுத்து நியூ இயர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார். அப்போது அங்கு வந்த பலரும் குடி போதையில் இருந்தனர். அவர்களை அமரவைத்து இனிமேல் வாகனங்களில் குடித்துவிட்டு செல்லமாட்டோம் என உறுதி கொடுங்கள் என அவர்களிடம் உறுதி வாங்கியபின், சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பின் அவசியம் குறித்து ஆலோசனை வழங்கினார்.
பின்னர் குடிகாரர்களுடன் நியூ இயர் கொண்டாடிய தேவி, எல்லோருக்கும் கை கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார். இந்த சம்பவம் குமாரபாளையத்தில் விசித்திரமாக, வித்தியாசமாக இருந்தது.