Skip to main content

காவல் ஆய்வாளரை தாக்கிய பாஜக நகர தலைவர்

Published on 18/09/2022 | Edited on 18/09/2022

 

Kovilpatti BJP city leader  police inspector conflict

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் அனுமதியின்றி பாஜகவினர் சுவரொட்டிகளை ஒட்டினர். இதனைக் கண்ட காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் அதனை தடுக்க முற்பட்டுள்ளார். மேலும், அவர்கள் அனுமதியின்றி ஒட்டி சுவரொட்டிகளை கிழித்துள்ளார். இதில், பாஜகவினருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பாஜக நிர்வாகிகள் காவல் ஆய்வாளர் மற்றும் அவரது வாகன ஓட்டுநரை தாக்கியுள்ளனர். 

 

சமீபத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா இந்து மதம் தொடர்பாக பேசிய கருத்து சர்ச்சையாக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியினர் கோவில்பட்டி பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ஆனால், அனுமதியில்லாமல் ஓட்டப்பட்டதால் அதனை அந்தப் பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த், அது குறித்து அவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

அதேசமயத்தில் அங்கு வந்த கோவில்பட்டி பாஜக நகர தலைவர் ஸ்ரீநிவாசன் மற்றும் பாஜக நிர்வாகி ரகுபாபு ஆகியோர் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் அவரது கார் ஓட்டுநரை தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான அவர்கள் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும், போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்